என் மலர்
நீங்கள் தேடியது "Jewel Robbery In Vilangudi"
விளாங்குடியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 47 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை விளாங்குடி டெம்சி காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 52). உணவு பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குற்றாலம் சென்றார்.
நேற்று காலை வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
யாரோ மர்ம நபர்கள் பூட்டிய வீட்டை உடைத்து அறையின் பீரோவில் இருந்த 47 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3.76 லட்சம் ஆகும்.
இது குறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.