என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jawans commit suicide"

    ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் தற்கொலை செய்துகொண்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படையின் 56-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்த டி.கே.தம்தா (வயது 50) என்பவர் நேற்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

    உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான டி.கே.தம்தா, நேற்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசிய பின்பு இந்த திடீர் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

    இரண்டாவதாக 20-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஹவில்தார் ஜோகேந்திர சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த இரண்டு தற்கொலை சம்பவங்களை பற்றி விசாரணை நடத்திவருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×