என் மலர்
நீங்கள் தேடியது "jambajar youth attack"
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை முக்தருன்னிசா தெருவை சேர்ந்தவர் லைகான் (வயது 18). சமையல் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் ஜாம்பஜார் அமீர்மஹால் எதிரில் உள்ள செல்ல பிள்ளையார் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் அங்கு வந்தனர். அவர்கள் உருட்டுக்கட்டையால் லைகானை தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் அவரது தலை, இடது கை, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.
அவரை நண்பர்கள் ஆட்டோ மூலம் கொண்டு சென்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் லைகானை அரிவாளால் வெட்டிய 4 பேர் அடையாளம் தெரிந்தது. அவர்கள் ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த சுயபு, அபீஸ், சிவா, அஜித் என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.






