என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron Materials Robbery In Erode"

    சித்தோட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடிய ஆசாமிகளை விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    சித்தோடு ஆவின் பால் பண்ணை உள்ளே பாரதி பெருமாள் நகரில் டாக்டர் சக்திவேல் என்பவர் வீடு கட்டி வருகிறார். ரமேஷ் என்பவர் மேஸ்திரியாக உள்ளார்.

    இங்கு போட்டு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் ஜாக்கிகள், பேனர்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    ×