என் மலர்
நீங்கள் தேடியது "Ireland beats england"
இங்கிலாந்தை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனைப் படைத்த ஸ்காட்லாந்து அணிக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் 371 ரன்கள் குவித்தது.
பின்னர் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. பேர்ஸ்டோவ் (105), ஹேல்ஸ் (52), மெயீன் அலி (46), பிளங்கெட் (47 அவுட் இல்லை) சிறப்பாக விளையாடிய போதிலும் 48.5 ஓவரில் 365 ரன்னில் ஆல்அவுட் ஆகி 6 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை 13-வது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்து வீழ்த்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஸ்காட்லாந்து அணியை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர், கத்துக்குட்டி அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து சச்சின் கூறுகையில் ‘‘கிரிக்கெட் ஆட்டம் குளோபல் போட்டியாக மாற அனைத்து அம்சங்களும் உள்ளன.

திறமையுடைய ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற அணிகளுக்கு அதிக அனுபவம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக ஏராளமான போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் வழங்க வேண்டும். இது அவர்களிடம் திறமையை வெளிக்காட்ட சிறந்த வழியாகும்’’ என்றார்.
முன்னாள் பேட்ஸ்மேன் லஷ்மண் ‘‘ஸ்காட்லாந்து அணிக்கு வாழ்த்துக்கள். நம்பர் ஒன் அணிக்கு எதிராக அட்டகாசமான வெற்றி. இந்த வெற்றியை அந்த அணியை நீண்ட நாட்களாக கொண்டாடும்’’ என்றார்.