search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International tennis tournament"

    • இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.6 லட்சமாகும்.
    • இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுபவர்களுக்கு ரூ.77 ஆயிரமும், 2-வது இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.45 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது.

    சென்னை:

    'மாலை முரசு' அதிபர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார், காந்தி நகர் கிளப்பின் தலைவராக 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தார். அவரது நினைவாக 2-வது சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    இரா.கண்ணன் ஆதித்தன் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் 20 வீரர்கள் நேரடியாகவும், 4 பேர் வைல்டு கார்டு வாய்ப்பு மூலமாகவும், 6 பேர் தகுதி சுற்று மூலமாகவும் களம் காணுகிறார்கள். இரட்டையர் பிரிவில் 14 ஜோடிகள் நேரடியாகவும், இரண்டு இணைகள் வைல்டு கார்டு வாய்ப்பு மூலமாகவும் இறங்குகிறார்கள். ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் மனிஷ் கணேஷ், சந்தேஷ் தத்தாத்ரேய் குராலே, ஒஜஸ் தேஜோ ஜெய பிரகாஷ், அர்ஜூன் மகாதேவன் (இருவரும் தமிழ்நாடு) ஆகியோருக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் வியட்நாம், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, தென் கொரியா, சீன தைபே ஆகிய 9 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இந்தியாவின் முன்னணி வீரர்களான ராம்குமார், சித்தார்த் ராவத், திக்விஜய் பிரதாப் சிங், மனிஷ் சுரேஷ்குமார், நிகி கலியண்டா பொன்னசா, பிராஜ்வால் தேவ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.6 லட்சமாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சத்து 4 ஆயிரமும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுபவர்களுக்கு ரூ.77 ஆயிரமும், 2-வது இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.45 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது.

    இந்த தகவலை தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலாளர் பிரேம்குமார் கர்ரா நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு டென்னிஸ் சங்க இணை செயலாளர் வெங்கடேஷ், தலைமை செயல் அதிகாரி ஹிடென் ஜோஷி, காந்தி நகர் கிளப் தலைவர் சுனில் ரெட்டி, செயலாளர் மகேஷ் ஷன்பாக், துணைத் தலைவர் மோகன் சதா சிவன், கமிட்டி உறுப்பினர்கள் நாராயணன், சுதர்சன் ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். #VenusWilliams
    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார்.



    இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 38 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 2 செட்டிலும் முதலில் முன்னிலை பெற்றாலும் அதனை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் மரியா சக்காரி, அமெரிக்க வீராங்கனை டானிலே காலின்சை சந்திக்கிறார். #VenusWilliams
    ×