என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Fisheries Conference"

    • பருவநிலை மாற்றம் குறித்த 3 ஆய்வு மாநாட்டு புத்தகங்களை வெளியிட்டார்.
    • துறையின் கல்வி பேராசிரியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இந்திய மீன்வள அமைச்சகம் சார்பில், சர்வதேச மீன்வள மேம்பாட்டு கருத்தரங்கு 3நாட்கள் நடைபெறுகிறது. கருத்தரங்கை மத்திய மீன்வள அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் பருவநிலை மாற்றம் குறித்த 3 ஆய்வு மாநாட்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    மீன் வளம் மற்றும் அதைச்சார்ந்த தொழில் முன்னேற்றம், புதுப்புது கண்டுபிடிப்புகள், பேரிடர் உள்ளடங்கிய பருவநிலை மாற்றங்கள் குறித்தும், இந்திய பசிபிக் பகுதியில் மீன்வள மேலான்மையை வலுப்படுத்தவும் கருத்தரங்கில் பேசப்பட்டது. சைனா, ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஆஸ்த்ரேலியா, மாலத்தீவு, பங்கலாதேஷ் போன்ற பகுதிகளில் இருந்து அந்நாட்டு பிரதிநிதிகள், கடல்வள ஆய்வாளர்கள், அத்துறையின் கல்வி பேராசிரியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

    ×