என் மலர்
நீங்கள் தேடியது "Indian women Hockey Team"
ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடுவதற்காக 20 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றது. #hockeyIndia
லண்டனில் அடுத்த மாதம் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக இந்திய பெண்கள் அணி ஸ்பெயின் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாட முடிவு செய்தது.
இந்த தொடர் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக ராணி தலைமையில் 20 பேர் கொண்ட இந்திய அணி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டது.
புறப்படுவதற்கு முன் இந்திய அணி கேப்டன் ராணி கூறுகையில் ‘‘ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இளம் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதே ஆட்டத்தை ஸ்பெயின் தொடரில் வெளிப்படுத்தினால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க அதிக வாய்ப்பு உள்ளது.’’ என்றார்.