என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Saurabh Chaudhary"

    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கமும், அர்ஜூன் சிங் சீமா வெண்கலப் பதக்கமும் வென்றனர். #ISSFWorldChampionship
    சாங்வான்:

    தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.



    சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். கொரிய வீரர் லிம் ஹாஜின் 243.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா 218 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்றனர். முன்னதாக நடந்த அணிகளுக்கான போட்டியில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஜெயின் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    16 வயது நிரம்பிய சவுரப் சவுத்ரி சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. #ISSFWorldChampionship
    ×