search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Communist protest"

    கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழு சார்பில் கொக்கு பார்க் அரசு அச்சகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், நிர்வாக குழு உறுப்பினர் சேது செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர்கள் தென்னரசன், லோகு, ரவிச் சந்திரன், வெங்கடேசன், சிலம்பரசன் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வீட்டு வரி சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும். குப்பை வரியை நீக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தொகுதியில் எரியாத மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும். சாலை வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரவேண்டும்.

    பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் சட்டமன்றத்தில் அறிவித்தபடி கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. #tamilnews
    தட்டாஞ்சாவடி காலனியில் எரியாத ஹைமாஸ் விளக்குகளுக்கு மலரஞ்சலி செலுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தட்டாஞ்சாவடி தொகுதி பாக்குமுடையான்பட்டு ஜீவா காலனியில் உள்ள ஹைமாஸ் விளக்கு, கிழக்கு கடற்கரை சாலையில் ராஜீவ்காந்தி சிலை வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட சோடியம் விளக்குகள் நீண்டகாலமாக எரியவில்லை.

    இதை சீரமைத்து விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசும், மின்துறையும் கண்டு கொள்ளவில்லை. இதனால் விளக்குகளை எரிய வைக்க வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், கிளை செயலாளர்கள் தனஞ்செழியன், லோகு, பாலமுருகன், செந்தில், மூர்த்தி, சசி, சத்தியசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி எரியாத ஹைமாஸ் விளக்குகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    ×