search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Bangladesh talks"

    • தூதரக ரீதியாக 3வது கட்டமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • விசா நடைமுறைகள், பயங்கரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.

    டாக்கா:

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே மூன்றாவது கட்டமாக தூதரக ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை டாக்காவில் நடைபெற்றது.

    தூதரக விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சுற்றுலா, மாணவர் தொடர்பான திருத்தப்பட்ட பயண ஏற்பாடுகள், வணிக விசாக்கள், நுழைவு மற்றும் வெளியேறும் விதிமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.

    சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை, பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பது அது தொடர்பான பரஸ்பர சட்ட உதவியை அதிகரிப்பது உள்ளிட்டவை இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தன. 

    எல்லை தாண்டியதாக இரு நாடுகளிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட சொந்த மக்களை திருப்பி அனுப்புதல் மற்றும் முன் கூட்டியே விடுவித்தல் குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொள்ளப்பட்டன.

    இந்தியா தரப்பிலான குழுவிற்கு அவுசஃப் சயீத்தும், பங்களாதேஷ் தரப்பிலாக தூதுக்குழுவிற்கு மஷ்பீ பைண்ட் சாம்சும் தலைமை தாங்கியதாக வெளியுறவுத்துறை அமைச்சக தகவலகள் தெரிவிக்கின்றன.

    ×