search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel attack"

    கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    நைரோபி: 

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.  

    இதில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில், கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது கொடூரமானது. இந்த தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. சபை தலைவர் எஸ்பினோசா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலையும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் சோமாலியா பயங்கரவாதிகளான அல் ஷபாப் அமைப்பினர் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். #KenyaHotelAttack #AlShabab
    நைரோபி:

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் இன்று பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் பற்றியெரிந்தன. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

    பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார் ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், கென்யாவின் நைரோபி நகரில் ஓட்டலில் நடைபெற்ற தாக்குதலுக்கு சோமாலியா நாட்டை சேர்ந்த அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #KenyaHotelAttack #AlShabab
    உண்ணாவிரதம் முடிந்து ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது பரோட்டா விலை தகராறில் அடிதடி-ஓட்டல் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை குரோம்பேட்டையில் ஒரு கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தில் பங்கேற்க பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் வந்தனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போராட்டம் முடிந்ததும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது குரோம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட முடிவு செய்தனர்.

    16 வயதுள்ள சிறுவன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு சென்று பரோட்டா விலையை விசாரித்தார். அப்போது ஊழியர் சிவானந்தம் ஒரு பரோட்டா ரூ.25 என்றார்.

    அதற்கு அவர் எங்கள் ஊரில் ரூ.5க்கு கிடைக்கிறது. இப்படி அநியாய விலைக்கு விற்கிறீர்களே என்று வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சிறுவன் பஸ்சுக்கு சென்று அதில் இருந்தவர்களிடம் தகவல் கூறினார்.

    பஸ்சில் இருந்தவர்கள் உடனடியாக ஓட்டலுக்கு வந்து ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.

    அரசியல் கட்சி தொண்டர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் மோதல் உருவானது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    ஓட்டலில் சாப்பிட வந்தவர்கள் திடீரென்று ஓட்டலில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களையெல்லாம் எடுத்து ஊழியர்கள் மீது வீசி அடித்தனர். அனைத்து பொருட்களையும் சூறையாடினர். அந்த பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது.

    போலீஸ் நிலையம் அருகே இருந்த கடையில் மோதல் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு சென்றனர்.

    இதனால் மோதலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். இதில் 7 பேர் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் சிவப்பிரகாஷ், சதீஷ் முத்தையா, வீரபாண்டி, பேரறிவாளன், பாலச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆவர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    மோதல் நடந்த போது அடிதடியில் ஈடுபட்டவர்கள் ஓட்டல் ஊழியர்கள் மீது வென்னீரை தூக்கி ஊற்றினார்கள். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×