search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home products to add beauty to the skin"

    • வீட்டு உபயோகப்பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.
    • தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    சருமத்துக்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு வீட்டு உபயோகப்பொருகளை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.

    தினமும் காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சிறிதளவு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு குளியல் போடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    உருளைக்கிழங்கு சாறும் சருமத்திற்கு அழகு சேர்க்கும். குறிப்பாக கருவளையங்களை போக்கி சருமப் பொலிவை அதிகப்படுத்தும். தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருவளையங்கள் மறையும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் வித்திடும்.

    ஒரு கைப்பிடி புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். இந்த செயல்முறை முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும். `பளிச்' தோற்றத்தையும் தரும்.

    ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து குழைத்து முகத்தில் பூசவும். அவை உலர்ந்ததும் முகத்தை கழுவினால் பொலிவு கிடைக்கும்.

    கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு தேன் கலந்து பூசி வர, முகச்சுருக்கம் நீங்கும்.

    ×