search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "hollywood producer"

  பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வீன்ஸ்ட்டின், இன்று மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் நான் குற்றமற்றவன் என்று வாக்குமூலம் அளித்தார். #HarveyWeinstein
  நியூயார்க்:

  ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

  #MeToo movement என்ற ஹேஷ்டேக் உடன் மேலும் பலர் தாங்களும் இவரது வலையில் வீழ்ந்த தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

  ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் ஹார்வே, எதிர்பாலினத்தவர்களின் சம்மதத்துடன் அவர்களுடன் உறவு வைத்துகொண்டதாகவும், நான் யாரையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.


  இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் நகர போலீசார் முன் ஹார்வே வெயின்ஸ்டீன் கடந்த மே மாதம் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், விலங்கு மாட்டி மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

  10 லட்சம் டாலர் சொந்த ஜாமினில் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்கவும், செல்லும் இடத்தை கண்காணிக்கும் எலக்ட்ரானிக் பட்டை அணிந்து கொள்ளவும் ஹார்வே வெயின்ஸ்டீன் சம்மதித்தார்.

  இந்நிலையில், இன்று இவ்வழக்கின் விசாரணைக்காக மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான ஹார்வி வீன்ஸ்ட்டின், எனக்கு எதிரான குற்றங்களை மறுக்கிறேன், நான் குற்றமற்றவன் என்று வாக்குமூலம் அளித்தார்.

  அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. #HarveyWeinstein #pleadsnotguilty
  பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது கற்பழிப்பு, பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #HarveyWeinstein
  நியூயார்க்:

  பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் (வயது 66). இவர் மீது ஹாலிவுட் பிரபலங்கள் ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹாயெக், ஆஷ்லே ஜூட் போன்றோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

  ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அவரது பாலியல் லீலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கைப்பாதையும் இறங்குமுகத்துக்கு வரத் தொடங்கியது.

  இந்த நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் போலீசில் சரண் அடைந்தார். பின்னர் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) ரொக்க ஜாமீனில் வெளியே வந்தார்.

  அதைத் தொடர்ந்து இப்போது அவர் மீது கற்பழிப்பு, பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மேன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி சைரஸ் வான்ஸ் ஜூனியர் தெரிவித்தார்.

  இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து இருப்பது, அவர் செய்த பாலியல் குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைக்கிற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது” என்று கூறினார்.

  அதே நேரத்தில் ஹார்வி வெயின்ஸ்டீன் வக்கீல் பெஞ்சமின் பிராப்மேன், “ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து இருப்பது ஒன்றும் வியப்புக்கு உரியது அல்ல; குற்றச்சாட்டு பதிவு என்பது வெறுமனே சட்டப்படி குற்றம் சாட்டுவது மட்டும்தான்” என்று குறிப்பிட்டார்.

  இருப்பினும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. கோர்ட்டு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. #HarveyWeinstein
  ×