search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hi-tech"

    • தானியங்கி நீர் அளவீட்டுமானி பொருத்த மத்திய நீர் ஆணையம் முடிவு செய்தது.
    • ஜுன் 2019 ல் உடுமலை அமராவதி அணையை ஆய்வு செய்தனர்.

    உடுமலை :

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழி காட்டுதலின்படி, காவிரி ஆறு பாயும் மாநிலங்களில் உள்ள நீர்தேக்கங்களில் நீர்வரத்து வெளியேற்றம் ஆகியவற்றை கணக்கிட்டு கணினி மூலம் உடனுக்குடன் கண்காணிக்க தானியங்கி நீர் அளவீட்டுமானி பொருத்த மத்திய நீர் ஆணையம் முடிவு செய்தது.

    இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் பணியில் துணைக்குழுவினர் ஈடுபட்டனர். இதன்படி, காவிரி நதி பாயும் மாநிலங்களில் துணை ஆறுகளில் உள்ள அணைகளை பெங்களூரு மத்திய நீர் ஆணைய இயக்குனர் தலைமையிலான 14 பேர் கொண்ட துணை ஒழுங்காற்று குழுவினர் கடந்த ஜுன் 2019 ல் உடுமலை அமராவதி அணையை ஆய்வு செய்தனர்.

    கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் உள்ள அணைகளிலும் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து மேட்டூர் அணை, பவானி சாகர் அணைகளில் அப்போது ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் மூலம், அமராவதி அணையில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை கண்காணிக்கும் வகையில் தானியங்கி நீர் அளவீட்டுமாணி பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த கருவியானது கணிணி மூலம் இணைக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள மத்திய நீர் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். தற்போது அமராவதி அணையில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் செயல்படவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×