என் மலர்
நீங்கள் தேடியது "Government Staff Apartment Rental"
அண்ணாநகர் மேற்கில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள 606 அடுக்கு மாடி வாடகைக் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.#TNCM #Edappadipalanisamy
சென்னை:
சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் ஏற்கெனவே இருந்த அரசு ஊழியர்களுக்கான 126 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால், அக்குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ், 200 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்த இடத்தில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள 606 அடுக்கு மாடி வாடகைக் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், சேர்த்து மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், எலாவூரில் 23 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 240 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பட்டுக்கோட்டை புறவழிச் சாலை (கட்டம்2), 26 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 3 இரயில்வே மேம்பாலங்களை திறந்து வைத்து, 381 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 3 இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 2 புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கோயம்புத்தூர்மாவட்டம், கோவைப்புதூரில் 2 கோடியே 80லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணி காவலர்களுக்கான பாளையம் மற்றும் ஆயுதக்கிடங்கு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 77 கோடியே 76 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 283 காவலர் குடியிருப்புகள், 12 காவல் நிலையங்கள், 12 காவல் துறை கட்டடங்கள், நாட்ராம்பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, ஆவடியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள காவலர் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். #TNCM #Edappadipalanisamy
சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் ஏற்கெனவே இருந்த அரசு ஊழியர்களுக்கான 126 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால், அக்குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ், 200 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்த இடத்தில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள 606 அடுக்கு மாடி வாடகைக் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், சேர்த்து மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மண்டலங்களில் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர்களாக பணிபுரிந்து வரும் 488 பணியாளர்களுக்கு நிரந்தர காலிப்பணியிடங்களான பட்டியல் எழுத்தர் நிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.