search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former Supreme Court judge"

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #BCCI #Ombudsman #DKJain
    புதுடெல்லி:

    டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. இதற்கிடையில் இருவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என்று விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நிர்வாக கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வினோத்ராய், டயானா எடுல்ஜி ஆகியோர் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை வெளிப்படையாக பேசி வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இதுபோல் மீண்டும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் நிர்வாக கமிட்டியின் 3-வது உறுப்பினராக ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் ரவி தோட்ஜ் நியமிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
    சூதாட்டத்தைப் போல் விபசாரத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே யோசனை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்ட பந்தயங்களை சட்டபூர்வமாக்கலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான என்.சந்தோஷ் ஹெக்டேவிடம் நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது:-

    அது நல்ல சிபாரிசு. சட்டவிரோத சூதாட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. எனவே, அதை சட்டபூர்வமாக்கும்போது, 75 சதவீத சட்டவிரோத சூதாட்டங்கள் நின்று விடும்.

    சில தீய பழக்கங்களை சட்டத்தால் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைப்பவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதாக அர்த்தம். அப்படி கட்டுப்படுத்த நினைத்தால், அது சட்டவிரோதமாக நடப்பது பெருகும். மதுவிலக்கு விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம்.

    விபசாரத்தையும் சட்டபூர்வமாக்கலாமா? என்று கேட்டால், ‘ஆம்’ என்றே சொல்வேன். விபசாரம் எல்லா இடத்திலும் நடக்கிறது. அதை சட்டபூர்வமாக்கி, அத்தொழிலில் உள்ளவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்தால், விபசாரம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×