என் மலர்
நீங்கள் தேடியது "former panchayat leader"
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள பெருமுடிவாக்கம் எம்.கே.பி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது45).இரண்டு முறை ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்தவர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதியில் கடந்த 15-ந் தேதி திருவிழா நடைபெற்றது. அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டின் அருகே அதிக சத்தத்துடன் மேளம் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது மின்தடை ஏற்பட் டது. அந்த நேரத்தில் மர்ம கும்பல் வெங்கடேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடி விட்டனர்.
கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசனுக்கு பஞ்செட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பெருமுடிவாக்கம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்த அண்ணன் தம்பியான பாஸ்கர், பாபு, எம்.கே.பி.தெருவை சேர்ந்த சரவணன், தேவா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.






