search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest area fire"

    கன்னிவாடி அருகே வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயால் 10 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமானது.

    கன்னிவாடி:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார வனப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள், விலை உயர்ந்த மரங்கள் அதிக அளவில் உள்ளன.

    கடந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டதால் வனப்பகுதியில் தொடர்ந்து காட்டு தீ பற்றியது. இதனால் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மரங்கள் மற்றும் மூலகை செடிகள் எரிந்து நாசமானது.

    வனத்துறையினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டதால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு மழை தொடர்ந்து பெய்ததால் வனப்பகுதியில் பசுமை ஏற்பட்டது.

    தற்போது பண்ணைப் பட்டி, கோம்பை, குட்டிக்கரடு பகுதியில் மீண்டும் வறட்சி தலை தூக்க தொடங்கி உள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் மரம் கடத்துவதற்காக தீ வைத்து செல்கின்றனர்.

    நேற்று இரவு குட்டிக்கரடு பகுதியில் திடீரென காட்டு தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு தீயை அணைத்தனர். இருந்தபோதும் தீ விபத்தில் அரியவகை மூலிகைகள் மற்றும் 10 ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து நாசமாகின. வனத்துறையினர் மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் பொதுமக்கள் உடனே செல்ல முடியவில்லை. வனத்துறையினர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டதால் 10 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது.

    எனவே இதற்கு வனத்துறையினர் நிரந்த தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×