search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower prices rise in Coimbatore"

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
    • மல்லிகைப்பூ ஒரு கிலோ 800 ரூபாயிக்கு விற்பனை

    கோவை:

    இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மக்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் கடைகளில் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் பூஜை பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர்.

    இதேபோன்று மக்கள் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்து வருகின்றனர். பூக்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் நாளை மறுநாள் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ 800 ரூபாயாகவும், முல்லை ஒரு கிலோ 500 ரூபாயாகவும், ஜாதிமல்லி கிலோ 480 வரையும், ரோஜா 320 வரையும், செவ்வந்தி ரூ.320, வாடாமல்லி ரூ.80, தாமரை ஒன்று ரூ.15, அரளி ரூ.200, கொளுந்து ரூ.50,அருகம்புல் ஒரு கட்டு ரூ.20, எருகம்பூ ஒன்று ரூ.50, வாைழ இலை ரூ.30, தென்னங்குருத்து ரூ.5, மா இலை ரூ.20,வெற்றிலை பாக்கு ரூ.10, விநாயகர் குடை ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    ×