என் மலர்
நீங்கள் தேடியது "Florian"
- நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார்.
- இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார்.
லிவர்பூல்:
ஜெர்மனி கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான புளோரியன் விர்ட்ஸ் கிளப் போட்டிகளில் அங்குள்ள பேயர் லெவர்குசென் அணிக்காக விளையாடி வந்தார். நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார். அவரை இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டியில் அங்கம் வகிக்கும் முன்னணி கிளப்பான லிவர்பூல் தன்வசப்படுத்த முயற்சித்து வந்தது.
இரு கிளப் நிர்வாகத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன்படி பேயர் லெவர்குசென் கிளப்பிடம் இருந்து 22 வயதான புளோரியனை ரூ.1,351 கோடிக்கு லிவர்பூல் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் அதிக தொகைக்கு வசப்படுத்தப்பட்ட 4-வது வீரர் ஆவார். அவர் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.






