search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Field survey by meeting the farmers in person"

    • செடிகளை பார்வையிட்டார்
    • அரசின் திட்டங்கள் முறையாக கிடைக்கின்றதா என சோதனை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பில் நெல்லி, பப்பாளி, பாதாம், எலுமிச்சை, தென்னை, புங்கம், புளியமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் மற்றும் மரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவை பயிரிடப்பட்டு வருகிறது.

    செயல்படுத்திய திட்ட பணிகளை தோட்டக்கலை இயக்குனர் பிருந்தா தேவி நேற்று விவசாயிகளை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் விவசாயிகளிடம் தங்களுக்கு முறையாக மானியங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் முறையாக கிடைக்கின்றதா எனவும் அங்கு பயிரிடப்பட்டுள்ள செடிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அனைத்து ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தை பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பிருந்தா தேவி கள ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது கலெக்டர் நேர்முக உதவியாளர் விசுவநாதன், இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் லதாமகேஷ், செல்வராஜ், உதவி இயக்குனர்கள் அசோக், ராஜ்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஹரிதாஸ் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    ×