என் மலர்
நீங்கள் தேடியது "fastest bullet train"
உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவையை தனது தலையாய குறிக்கோளாக வைத்துள்ள ஜப்பான் அரசு மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்திலான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
டோக்கியோ:
அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் மாற்றங்களையும் தொழில் புரட்சியையும் செய்துவரும் ஜப்பான் அரசு வரும் 2031-ம் ஆண்டுக்குள் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில் சமீபத்தில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சோதனை ஓட்டத்தை நடத்திய ஜப்பான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேலும் ஒரு புதிய சாதனையை படைத்தது.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மைபாரா மற்றும் கியோட்டோ நகரங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த புல்லட் ரெயில் சோதனை மூலம் மணிக்கு 360 கிலோமீட்டர் வேகம் என்ற இலக்கை அடைய முடிந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரித்துள்ளன.
வரும் ஜூலை மாதத்தில் இருந்து இந்த புல்லட் ரெயில் டோக்கியோ - ஒசாக்கா வழித்தடத்தில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






