search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EV tips"

    • எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
    • எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு.

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவது சாதாரண காரியம் தான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளிலும் பயனர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் நிலையிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் சிக்காமல் இருக்கவும், எலெக்ட்ரிக் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் மேற்கொள்ள வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    உடனே சார்ஜ் செய்ய வேண்டாம்:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக வாகனத்தை பயன்படுத்திய உடனே அதனை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, பேட்டரி ஆயுளும் மேம்படும்.

    நீண்ட நேர சார்ஜிங்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவுக்கு சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுளை பெருமளவு பாதிக்கும். மேலும் அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக வாகனம் தீப்பிடித்து எரிய அதிக வாய்ப்புகள் உண்டு.

    மழையின் போது சார்ஜிங்:

    நீரும், மின்சாரமும் ஒன்றாகும் போது ஏற்படும் விளைவு அனைவரும் அறிந்ததே. வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பான வாட்டர் ப்ரூஃபிங் வசதி வழங்கினாலும், சில சமயங்களில் சிறு ஓட்டை மூலம் மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் மழை பெய்யும் போது வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    சார்ஜர்களில் கவனம் அவசியம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய சான்றளிக்கப்பட்ட சார்ஜிங் மையத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதனை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

    பேட்டரி பயன்பாடு:

    எலெக்ட்ரிக் வாகன பேட்டரியை முழுமையாக தீர்ந்து போகும் வரை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கிற்கு அழுத்தம் அதிகரித்து, அதன் ஆயுளை குறைக்கும். இதோடு பேட்டரி பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும். 

    ×