search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ettu eluthu perumal kovil"

    நெல்லை அருகே உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதி நடக்கிறது.
    கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    மாலையில் கோபாலகிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண் பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இந்த பண்டங்கள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி 12 ஆயிரத்து 8 பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பானைகள், கலயங்களில் வண்ணம் பூசப்பட்டு கிருஷ்ணன், சிவன் மற்றும் சாமி படங்கள் வரையப்பட்டு வருகிறது.

    நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதியும், 3-ந்தேதியும் நடக்கிறது. இந்த நாட்களில் காலை 10.30 மணிக்கு சுபதரிசன அலங்காரமும், இரவு 7 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு மலர் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    பாளையங்கோட்டை ராஜாக்கள் தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அன்று காலை 8 மணிக்கு பஜனை பூஜை, மாலை 7 மணிக்கு உறியடிப்பு நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    பாளையங்கோட்டை சிவன் மேலரதவீதியில் உள்ள நவநீத கிருஷ்ணசுவாமி பஜனை மடத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் உறியடி நிகழ்ச்சி, திருவிளக்கு பூஜை, பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
    ×