என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric trains delayed"

    பொன்னேரி - மீஞ்சூர் இடையே ரெயில் பாதை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி - மீஞ்சூர் இடையே ரெயில் பாதை தண்டவாளத்தை இன்று அதிகாலை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மின்சார ரெயில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி பொன்னேரி ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த 3 மின்சார ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

    இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தண்டவாள விரிசலை சரிசெய்தனர்.

    மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள், வியபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
    ×