search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "economy weak"

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை வேண்டுமென்றே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 2014 மே-ஜூன் மாதத்திற்கு பிறகு எந்தவித காரணமும் இன்றி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது. மக்கள் அன்றாட தேவைக்கு எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது. இது வாடிக்கையாளர்களை கசக்கி பிழியும் நடவடிக்கை இன்றி வேறு ஒன்றும் இல்லை.

    இணை செயலாளர் பதவி நியமனம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.


    விலையேற்றம் செயற்கை தனமானது என்ற எண்ணம் எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிகளே காரணம். ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனையில் கூட தெளிவான முடிவு இல்லை.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram

    ×