என் மலர்
நீங்கள் தேடியது "dravida viduthalai kazhagam"
புதுச்சேரி:
மே-17 இயக்க ஒருங் கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்த மத்திய, தமிழக அரசை கண்டித்தும், அவரை விடுவிக்க கோரியும் திராவிட விடுதலை கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது
புதுவை காமராஜர் சிலை ராஜா திரையரங்கம் அருகே நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் தந்தை பிரியன், செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகனாதன், தந்தை பெரியார் திராவிடர் கழக மோகன், அம்பேத்கார் தொண்டர் படை பாவாடை ராயன், தமிழர் களம் அழகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற வேண்டும். அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட விடுதலை கழகத்தினர் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.






