என் மலர்
நீங்கள் தேடியது "doctor home"
மதுரவாயல் டாக்டர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயல் பாரதி நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் நவின்குமார். பல் டாக்டர்.
இவர் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். நவின்குமார் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு சென்றார்.
நேற்று வீடு திரும்பிய நவின்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்து இருந்த 25சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் நவின்குமார் புகார் அளித்தார். குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






