என் மலர்
நீங்கள் தேடியது "dmk administrator meeting"
தூத்துக்குடி:
தூத்துக்குடி தி.மு.க. மாநகர பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், பொருளாளர் சுசீந்திரன், மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில மருத்துவர் அணி செயலாளர் பூங்கோதை எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.
இதில் கருணாநிதி 95-வது பிறந்தநாளை முன்னிட்டு 22-ந் தேதி கீதா மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் மருத்துவ முகாமில் பல்வேறு வகையான சிறப்பு நிபுணர்கள் உள்ள டாக்டர்கள் வர இருக்கிறார்கள். இதில் தி.மு.க.வினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ்.ரமேஷ், பொரு ளாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொழிலதிபர் பொன்சிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






