என் மலர்
நீங்கள் தேடியது "colleges student"
கோவை:
மதுரை தெப்பக்குளம் முனிசாலையை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் சபரீஸ்வரி (வயது 18). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று காலை கோவை ரெயில் நிலையத்தில் மாணவி சபரீஸ்வரி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தார். இதனை அறிந்த ரெயில்வே போலீசார் மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 2 தோழிகளுடன் ரெயிலில் வந்தேன். கோவை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது இயற்கை உபாதைக்காக ரெயிலை விட்டு இறங்கினேன். அதற்குள் ரெயில் புறப்பட்டுச்சென்று விட்டது என்று கூறினார். கழிப்பறை ரெயில் பெட்டிக்குள்ளேயே இருக்கும்போது ஏன் மாணவி கீழே இறங்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து ரெயில்வே இன்ஸ்பெக்டர் லான்ஸ், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவியை அங்குள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். மாணவி குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.