search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Colleges Opening"

    • சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • அரசு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் பஸ், ரெயில் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பருவத்தேர்வு மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடந்தது.

    பின்னர் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது. முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பருவத்தேர்வு எழுதி இது நாள்வரையில் விடுமுறையில் இருந்தனர்.

    அவர்களுக்கு 18-ந்தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன.

    தமிழகத்தில் 163 அரசு, உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் நூற்றுக்கும் மேலான தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பிற்கு சென்றனர்.

    சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் பஸ், ரெயில் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றனர்.

    மாநில கல்லூரி, லயோலா, கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி, எத்திராஜ், வைஷ்ணவ கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரி, ஸ்டெல்லா மேரி, வள்ளியம்மை, நந்தனம், வியாசர்பாடி அரசு கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் உற்சாகம் கரை புரண்டு ஓட வகுப்பிற்கு சென்றனர்.

    ×