search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore motor cycle theft"

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் இரு சக்கர வாகனம் நிறுத்த 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாக பார்க்கிங் மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 8 மாதத்தில் 70-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக வாகன உரிமையாளர்கள் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேரமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கேமிராக்கள் செயல்படுவது இல்லை. ஆஸ்பத்திரியில் 4 இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இதில் 2 இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த 2 கண்காணிப்பு கேமிராக்களும் வேலை செய்ய வில்லை.இதனை நோட்டமிடும் திருடர்கள் எளிதாக இருசக்கர வாகனங்களை திருடிச் செல்கின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினசரி ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் நடந்து வருகிறது.

    கடந்த வாரத்தில் மட்டும் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு பேனதாக புகார் வந்துள்ளது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் திருட்டு சம்பவத்தை தடுக்க பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறை கொண்டு வர வேண்டும். மேலும் செயல்படாத கண்காணிப்பு கேமிராக்களை சரி பார்க்க வேண்டும். அப்போது தான் மோட்டார் சைக்கிள்கள் திருட்டை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×