என் மலர்
நீங்கள் தேடியது "coimbatore gandhipuram bus stand"
கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்ற தொழிலாளியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் பாபு (வயது 36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு காந்திபுரம் பஸ் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் பாபுவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த பாபு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை பார்த்த அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் வாலிபர்களை விரட்டிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை கைபற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.






