என் மலர்
நீங்கள் தேடியது "cinema theatre worker died"
கிருமாம்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற சினிமா தியேட்டர் ஊழியர் மினிலாரி மோதி பலியானார்.
பாகூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது54). இவர் கடலூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை இவர் கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடை பகுதிக்கு வந்திருந்தார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக கலியபெருமாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கலியபெருமாளை அங்கிருந்தவர்கள் மீட்டு பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






