search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinasatellite"

    சீன ஆராய்ச்சியாளர்கள் சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்யும் வகையில் செயற்கை கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. #Queqiao #Chinasatellite
    பீஜிங்:

    சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இன்று அதிகாலை புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் சந்திரனின் இருண்ட பக்கத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது.



    இன்று அதிகாலை ராக்கெட்டிலிருந்து செலுத்தப்பட்ட 25 நிமிடத்தில் செயற்கை கோள் பூமி-சந்திரன் வட்டப்பாதையை சென்றடைந்தது. அதன் பின் தகவல் தொழில்நுட்பம் செயல்பட தொடங்கியது.


    குயூகியா என்ற இந்த செயற்கை கோள் சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆராய்ச்சி செய்வதால் பூமியிலிருந்து 4.5 லட்சம் தொலைவில் உள்ள சந்திரனின் இரண்டாவது படலத்திற்கு செல்ல உள்ளது. அப்பகுதிக்கு அனுப்பப்படும் முதல் செயற்கை கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இது சீனா அனுப்பும் 275 வது செயற்கை கோளாகும்.  #Queqiao #Chinasatellite

    ×