என் மலர்
நீங்கள் தேடியது "Chengalpatt cracks in tracks"
செங்கல்பட்டை அடுத்த ஒத்திவாக்கம்- திருமணி இடையே சென்னை வரும் மார்க்க தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த ஒத்திவாக்கம்- திருமணி இடையே சென்னை வரும் மார்க்க தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை பணியில் இருந்த ரெயில்வே ‘கேங்மேன்’ பார்த்து அதிகாரிகளுக்கு தகவல்கொடுத்தார்.
இதனால் உஷாரான அதிகாரிகள் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில்களை ஆங்காங்கே நிறுத்த உத்தரவிட்டனர். இதன் காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டது. காரைக்குடியில் இருந்து வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் அச்சரப்பாக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். அதன் பின் ரெயில்கள் சென்னை புறப்பட்டு வந்தன. இதன் காரணமாக திருச்செந்தூர் ரெயில் 1 மணி நேரம் தாமதமாகவும், பல்லவன் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாகவும் செங்கல்பட்டு வந்தன. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தண்டவாளத்தில் விரிசல் எற்பட்டது. நாசவேலை எதுவும் காரணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.