search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central minister sushma swaraj"

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் வரும் 11-ம் தேதிவரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நேற்று மாலை டெல்லி வந்தடைந்த தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவினரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

    இந்தியா மற்றும் தென் கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையொப்பமானது. தென் கொரிய வர்த்தக மந்திரி கிம் ஹியூன் சோங் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இதைதொடர்ந்து, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்த மூன் ஜே-இன் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
     
    தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள மூன் ஜே-இன்-னுக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை மாலை விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தும் தென்கொரியா அதிபர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது. #SushmameetsKoreanPresident  #SushmameetsMoonJae-in
    ×