search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central information commission"

    மத்திய தகவல் ஆணையத்துக்கு 4 புதிய தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். #CentralInformationCommission
    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஆணையத்தில் மத்திய தகவல் ஆணையர் உள்பட 11 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர்.

    இந்நிலையில், 4 புதிய தகவல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

    யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். #CentralInformationCommission
    பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளை தெரிவிக்க முடியாது என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. #AmitShah #CIC
    புதுடெல்லி:

    பாஜக தேசிய தலைவராக அமித் ஷா பதவி வகித்து வருகிறார். இவருக்கு விஐபிக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, தீபக் ஜுனேஜா என்பவர் பாஜக தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவழித்து வரும் தகவல்கள் கேட்டு மத்திய தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.

    அதில், ராஜ்ய சபாவில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மத்திய அரசின் செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.  மேலும், யார் யாருக்கெல்லாம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்ற பட்டியலையும் கோரியிருந்தார்.

    இந்த விண்ணப்பம் தொடர்பாக பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு செலவினங்கள் குறித்த தகவலை பாதுகாப்பு கருதி தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளது. #AmitShah #CIC
    ×