search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Government Revenue"

    கடந்த மே மாதம் வரை, மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 461 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், வரி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 408 கோடி ஆகும்.
    புதுடெல்லி:

    கடந்த மே மாதம் வரை, மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 461 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், வரி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 408 கோடி ஆகும். வரியற்ற வருவாய் ரூ.24 ஆயிரத்து 49 கோடி. கடனற்ற மூலதன வரவு ரூ.1,004 கோடி.

    இந்த வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்காக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 578 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தை விட ரூ.15 ஆயிரத்து 217 கோடி அதிகம் ஆகும்.

    மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 954 கோடி. மொத்த வருவாய் செலவினம் ரூ.73 ஆயிரத்து 606 கோடி ஆகும். இத்தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×