search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauliflower Mint Rice"

    • காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம்.
    • காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ்

    காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. இத்தகைய காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

    தேவையான பொருட்கள்

    நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்

    சாதம் – ஒரு கப்

    பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

    பச்சை மிளகாய் – தேவையான அளவு

    இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

    புதினா – ஒரு கைப்பிடி அளவு

    எண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:

    காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்க வேண்டும்.

    வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

    இதனுடன் வடித்த சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் – புதினா ரைஸ் ரெடி. சுவையும் அருமையாக இருக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகம் அளிக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.

    ×