என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brazil football player ronaldo"

    இபிசா சென்றிருந்த பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டா. தலைசிறந்த வீரரான இவர் பிரேசில் அணிக்காக இரண்டு முறை உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்தவர். 2002 உலகக்கோப்பையில் ஜாம்பவனாக திகழ்ந்தவர்.

    இவர் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக விளையாடியவர். 41 வயதாகும் இவர் ஸ்பெயின் நாட்டிற்கு உட்பட்ட கடற்கரையான வாலேன்சியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இபிசா தீவிற்கு சென்றிருந்தார்.



    இந்நிலையில் அவர் இபிசாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐலண்டு டெய்லி டியாரியொ டி இபிசா செய்தி வெளியிட்டுள்ளது. நிமோனியா நோய் தாக்கியதால் அவசரமாக மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அதன்பின் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
    ×