search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat sinking"

    • லெபனானில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழிப் பயணம்.
    • மீட்கப்பட்ட 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

    டார்டவுஸ்:

    லெபனான் நாட்டில் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர், இதனால் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கடும் வாழ்வாதார போராட்டங்களை சந்தித்து வருகின்றன. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லாடி வருகின்றனர். இதனையடுத்து அண்டை நாடுகளில் அவர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லெபனானில் இருந்து சிரியாவிற்கு 100-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று சிரியாவின் கடற்கரை நகரமான டார்டவுஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது. அந்த படகில் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 


    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிரியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். எனினும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 77 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தொண்டி அருகே விசைப்படகு கடலில் மூழ்கியதில் மீனவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொண்டி:

    தொண்டி அருகே உள்ள சம்பை கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியான் என்பவர் மகன் ஜான்போஸ்கோ (வயது 65). இவர் கடந்த 40 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சோளியக்குடி லாஞ்சியடியை சேர்ந்த அஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜான்போஸ்கோ மற்றும் மணக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    சுமார் 6 கடல் மைல் தூரத்தில் மீன்பிடிக்க வலைவிரித்து கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகிற்குள் கடல்நீர் புகுந்துள்ளது. உடனே அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் உதவியுடன் கரையை நோக்கி வந்தனர். ஆனால் அதற்குள் படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது.

    அதில் படகில் இருந்த ஜான்போஸ்கோ, சேகர் ஆகியோர் கடலில் குதித்து, அந்த பகுதியில் இருந்த மற்றொரு படகிற்கு நீந்தி சென்றனர். அதில் ஜான்போஸ்கோ மாயமானார். இதுகுறித்து கரை திரும்பிய மீனவர், ஜான்போஸ்கோவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று ஜான்போஸ்கோவின் உடல் கடலில் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மீனவர்கள் அவரது உடலை மீட்டு சோளியக்குடி கரைக்கு கொண்டுவந்தனர்.

    தகவலறிந்த தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அய்யனார் உள்ளிட்ட போலீசார் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×