search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP counters"

    மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது என பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. #PMModi #Expenditure
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், இதற்காக அதிகம் செலவிடப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுகளில் இதுவரை 36 வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு உள்ளார். 155 நாட்கள் வெளிநாடுகளில் இருந்துள்ளார். இதற்காக ரூ.387.24 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

    ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 31 வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் 131 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார். இதன் மூலம் ரூ.386.35 கோடி செலவிடப்பட்டது.

    மோடியை விட குறைந்த வெளிநாடு பயணம் மற்றும் குறைவான நாட்கள் மன்மோகன்சிங் தங்கி இருந்த போதும், ஏறக்குறைய அதே அளவிலான தொகை செலவிடப்பட்டு உள்ளது. எனவே மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #PMModi #Expenditure 
    ×