என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bisons encroaching on agricultural lands"

    • 10 ஏக்கர் பயிர்கள் சேதப்படுத்தியது
    • உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை அதிக மலைகள் மற்றும் காடுகள் சார்ந்த பகுதியாக ஒடுகத்தூர் பகுதி இருந்து வருகிறது. இந்த பகுதி மாவட்டதிலேயே அதிக ஊராட்சிகளை கொண்டதாகவும், விவசாயத்திற்கு ஏற்ற பகுதியாகவும் விளங்கி வருகிறது.

    அதேபோல், மலைகளும், காடுகளும் நிறைந்த இந்த பகுதியில் கொய்யா, வாழை, நெல், கேழ்வரகு, கொள்ளு, கம்பு, கரும்பு, பலா மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்கள் இப்பகுதியில் அதிகம் விளைவிக்கப்படுகின்றது.

    இதனால் காட்டு பகுதிகளில் இருந்த மிருகங்கள் ஊருக்குள் வருகின்றன. இந்த நிலையில் காடுகள் ஒட்டியுள்ளதால் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டெருமைகள், பண்றிகள், மான்கள் மற்றும் யானைகள் அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைகின்றனர்.

    கடந்த ஆறு மாத காலமாக காட்டெருமைகள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது நேற்று மாலையும் மேலரசம்பட்டு பகுதியில் உள்ள சுமார் 10 ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

    இவை கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை காட்டெருமைகள் ேசதப்படுத்துவதால் அதனை கட்டுப்படுத்த விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். அதனை தடுக்க முயன்ற போது காட்டெருமைகள் தாக்கி பலர் காயமடைந்துள்ளனர்.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாலும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, எங்களாலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே, விவசாயிகள் நலனுக்காக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் வன விலங்குகளை முறையாக தடுத்தி நிறுத்தி மீண்டும் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×