search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australia Lost Series"

    ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு தொடர்களை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. #ENGvAUS
    கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த அணி ஆஸ்திரேலியா. ஒருநாள் போட்டியில் 1999, 2003 மற்றும் 2007-ல் தொடர்ச்சியாக மூன்று முறை உலகக்கோப்பையை கைப்பற்றி சரித்திர சாதனைப் படைத்தது. ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்னே, மெக்ராத் ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர், அந்த அணி தனித்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்தது.

    தற்போது முற்றிலும் துவண்டுவிட்டது. சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டம் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 481 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.



    இந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்ததுடன் தொடரையும் இழந்தது. இந்த தொடரோடு தொடர்ச்சியாக நான்கு ஒருநாள் தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா 1999 முதல் 2008 வரை சுமார் 9 ஆண்டுகளில் நான்கு ஒருநாள் தொடர்களை மட்டுமே இழந்திருந்தது. தற்போது 2017-ல் இருந்து சுமார் ஒன்றரை ஆண்டிற்குள் தொடர்ச்சியாக நான்கு தொடர்களை இழந்து சோதனைக்குள்ளாகியுள்ளது.
    ×