search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ather 340"

    ஏத்தர் 340 மற்றும் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏத்தர் 340 மற்றும் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தோற்றம் பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. எனினும் இவற்றின் ஸ்டிக்கரிங் மூலம் வித்தியாசப்படுத்த முடியும். முதற்கட்டமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்டு அதன் பின் மற்ற நகரங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பிரஷ்லெஸ் டிசி மோட்டார் மற்றும் ஏத்தர் எனர்ஜி உருவாக்கிய பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது. அந்த வகையில் இந்த பேட்டரிக்கள் 3 ஆண்டுகள் அல்லது அன்லிமிட்டெட் கிலோமீட்டர்களுக்கு வாரன்டி கொண்டுள்ளன. 

    ஏத்தர் 340 மற்றும் 450 வேரியன்ட்களில் முறையே 20 என்எம் மற்றும் 20.5 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. ஏத்தர் 340 மாடலில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர்களுக்கு செல்லும் திறன், அதிகபட்சம் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகமும், 5.1 நொடிகளில் மணிக்கு 0-40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஏத்தர் 450 மாலில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்களுக்கு செல்லும் திறன், அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகமும், மணிக்கு 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இன்பில்ட் ரிவர்ஸ் அசிஸ்டன்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஸ்கூட்டரை பின்புறம் இழுக்கும் திறன் கொண்டுள்ளது. எனினும் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் அப்டேட் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்கூட்டரின் மென்பொருள் மற்றும் ஃபர்ம்வேர்களை அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 340 மற்றும் 450 மாடலில் ஏழு இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் அசிஸ்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஏத்தர் 340 மற்றும் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை இந்தியாவில் முறையே ரூ.1.09 லட்சம் மற்றும் ரூ.1.24 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×