என் மலர்
நீங்கள் தேடியது "Arumbarthapuram bridge"
புதுச்சேரி:
வில்லியனூர் மாவட்ட பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் ராணி மகாலில் நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை 4 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி முறை கேட்டால் சீரழிந்தது. மிகுந்த துயரத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கியும், தொழிலாளர்களுக்கு தரவேண்டிய 18 மாத சம்பளத்தையும் உடனே வழங்கி, திறன்மிக்க நிர்வாக அதிகாரியை நியமித்து ஆலையை விரைந்து திறக்க வேண்டும்.
ஊசுடு ஏரி, கடந்த 30 ஆண்டுகளாக தூர் வாராப்படாமல் உள்ளதால் அதன் கொள்ளளவில் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. எனவே உடனடியாக ஏரியையும் மற்றும் அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனடியாக தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
உறுவையாறு சங்கரா பரணி ஆற்றின் தடுப்பணையை ஒரு மீட்டருக்கு உயர்த்தி, படகு குழாம் அமைத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் அமைத்திட 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி இணைப்பு பாலத்திற்கு, மத்திய அரசு சார்பில் ரூ.29 கோடி நிதி ஒதுக்கியும், புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு பாலம் அமைப்பதற்கான நிலத்தை இன்றைய தேதி வரை கையகப்படுத்தி கொடுக்காமல், தினம் தினம் ஏற்படும் விபத்து மற்றும் உயிர் இழப்புகளால் மக்கள் படும் அவதியை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டிப்பதோடு, உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும்.
மணல் தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






