search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "argentina vs france"

    உலகக்கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி மோத உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #worldcup2018 #LionelMessi #argentinavsfrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால் பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ்-’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோது கின்றன. இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் திணறியது. ஐஸ்லாந்துடன் டிரா செய்த அந்த அணி குரோஷியாவிடம் தோற்றது.

    அடுத்து நைஜீரியாவிடம் போராடி வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா அணியில் கேப்டன் மெஸ்சி நட்சத்திர வீரராக உள்ளார். முதல் 2 ஆட்டத்தில் சொபிக்க தவறிய அவர் கடைசி போட்டியில் ஒரு கோல் அடித்து பார்முக்கு திரும்பி உள்ளார். அவருக்கு ஏஞ்சல்டிமரியா, மார்கஸ் ரோஜோ ஆகியோர் பக்க பலமாக உள்ளனர். இதனால் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் அர்ஜென்டினா நுழையுமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஆனால் பிரான்சின் தடுப்பு ஆட்டத்தை உடைத்து கோல் அடிப்பது கடும் சவாலாக இருக்கும். இதில் மெஸ்சி ஜொலிப்பது மிகவும் அவசியம்.

    முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் பலம் வாய்ந்து இருக்கிறது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, பெரு அணிகளை வீழ்த்தியது. டென்மார்க்குடன் டிரா செய்தது. அந்த அணிக்கு 2-வது சுற்றில் இருந்துதான் சவால் ஆரம்பமாகிறது. நட்சத்திர வீரர் கிரிஸ்மான் தனது முழு திறமையை இன்றும் நிரூபிக்கவில்லை. பால்போக்பா, பாப்பே, ஆலிவர் ஜுரூட் நல்ல நிலையில் உள்ளனர். பிரான்ஸ் அணி தடுப்பு மற்றும் தாக்குதல் ஆட்டம் என இரண்டிலும் சிறப்பாகவே இருக்கிறது.

    இதனால் கால் இறுதிக்குள் நுழையும் வேட்கையுடன் அந்த அணி உள்ளது. முன்னாள் சாம்பியன் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இப்போட்டி குறித்து பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ன்ஸ் கூறியதாவது-

    அர்ஜென்டினா மற்றும் மெஸ்சிக்கு எதிராக களத்தில் விளையாடும் போது அவரை தடுக்க பல்வேறு வழிகளை செயல்படுத்த வேண்டும். அவர் ஆட்டத்தில் வித்தியாசத்தை காட்டுவார் என்பதை அறிவோம் என்றார். #worldcup2018 #LionelMessi #argentinavsfrance

    ×