என் மலர்
நீங்கள் தேடியது "Arcot Veeraswami"
- ஆற்காடு வீராசாமி முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
- டாக்டர்கள் ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னை:
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மூத்த தலைவருமான ஆற்காடு வீராசாமி (வயது 92) முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். நேற்று வீட்டில் அவர் திடீரென வழுக்கி விழுந்து விட்டார்.
இதில் அவரது தோள்பட்டை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டு விட்டது. அவரால் எழுந்திரிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை தூக்கி உட்கார வைத்தனர்.
ஆனாலும் அவருக்கு தோள்பட்டை வலி அதிமாக இருந்ததால் வடபழனியில் உள்ள 'சிம்ஸ்' ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முடநீக்கியல் துறை மருத்துவர் விரைந்து வந்து சிகிச்சை மேற்கொண்டனர்.






